சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் வழக்கு பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி 5 மணி நேரம் சாட்சியம்: விழுப்புரம் கோர்ட்டில் இன்றும் விசாரணை

விழுப்புரம்: சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் வழக்கில், விழுப்புரம் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி 5 மணி நேரத்திற்கும் மேலாக சாட்சியம் அளித்தார். தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்து எடப்பாடி பழனிசாமி பாதுகாப்பு பணிக்குச்சென்ற பெண் எஸ்பி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்தாக எழுந்த புகாரின்பேரில், அப்போதைய சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி, எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 8ம் தேதி இவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.  இதை தொடர்ந்து நேற்று முதல் சாட்சி விசாரணை தொடங்கியது. அப்போது, டிஜிபி, எஸ்பி ஆகிய இருவரும் ஆஜராகினர். தொடர்ந்து காலை 11 மணியளவில் விசாரணை தொடங்கியது. அப்போது, பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது நீதிமன்றத்தின் கதவுகள், ஜன்னல்கள் அனைத்தும் மூடப்பட்டன. எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணைக்கும் பெண் எஸ்பி பதிலளித்தார். சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக பெண் எஸ்பி சாட்சியம் அளித்து விட்டுச்சென்றார். தொடர்ந்து, அவரது கணவர் இன்று சாட்சியம் அளிக்கிறார். …

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்