சிறப்பு கைத்தறி கண்காட்சி

நாமக்கல், ஆக.6: தேசிய கைத்தறி தினத்தையொட்டி, ராசிபுரத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி நாளை (7ம் தேதி) நடைபெறுகிறது. கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில், கைத்தறியில் உற்பத்தியில் செய்யப்பட்ட துணி ரகங்களான ராசிபுரம் பட்டு சேலைகள், இளம்பிள்ளை, ஆர்.புதுப்பாளையம் பருத்தி சேலைகள் மற்றும் காட்டன் கோர்வை சேலைகள், கைத்தறி வேட்டி ரகங்கள், கைத்தறி துண்டுகள், அகர்லிக் சால்வைகள், பவானி ஜமுக்காளம், பாலும் பழமும் பெட்சீட்கள் மற்றும் கால் மிதி(மேட்) ரகங்கள் 20 சதவீத தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் இக்கண்காட்சியில் கலந்து கொண்டு கைத்தறி துணி ரகங்களை வாங்கி பயன் பெறும்படி கலெக்டர் உமா கேட்டுகொண்டுள்ளார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை