சிறந்த முறையில் கல்வி கற்று சான்றோர்களாக திகழ வேண்டும்: மாணவர்களுக்கு மேயர் அறிவுரை

 

மதுரை, பிப்.3: மதுரை மாநகராட்சி பொன்முடியார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் பாலமந்திரம் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சைக்கிள்களை வழங்கி மேயர் இந்திராணி பொன்வசந்த் பேசும்போது, ‘‘மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 2945 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பொன்முடியார் பெண்கள் பள்ளியில் 199 மாணவிகள், பாலமந்திரம் பள்ளியில் 79 மாணவர்கள், 21 மாணவிகளுக்கும் என மொத்தம் 299 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் சிறந்த முறையில் கல்வியை கற்று சான்றோர்களாக திகழ வேண்டும்’’ என்றார்.

இந்த நிகழ்வில் மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், சுகாதாரக்குழு தலைவர் ஜெயராஜ், உதவி கமிஷனர் ரெங்கராஜன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், கல்வி அலுவலர் மாரிமுத்து, உதவி செயற்பொறியாளர் காமராஜ், கவுன்சிலர் உமா, தலைமை ஆசிரியர் நாகஜோதி, பாலமந்திரம் பள்ளி செயலாளர் சோமசுந்தரம், பொருளாளர் சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு