Thursday, June 27, 2024
Home » சிறந்த படம், சிறந்த இயக்குனர் உள்ளிட்ட 7 ஆஸ்கர் விருதுகளை தட்டிச்சென்றது ‘Everything Everywhere All At Once’ திரைப்படம்!!

சிறந்த படம், சிறந்த இயக்குனர் உள்ளிட்ட 7 ஆஸ்கர் விருதுகளை தட்டிச்சென்றது ‘Everything Everywhere All At Once’ திரைப்படம்!!

by kannappan
Published: Last Updated on

வாஷிங்டன் : அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில், திரையுலகின் மிக உயிரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை , சிறந்த எடிட்டிங் ஆகிய 7ஆஸ்கர் விருதுகளை வென்றது Everything Everywhere All at Once திரைப்படம். ஆஸ்கர் விழாவில் வழங்கிய விருதுகளின் தொகுப்புகள் பின்வருமாறு… *சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை இந்தியாவின் The elephant whisperers வென்றது. இயக்குநர் கார்த்தி கொன்சால்வ்ஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் விருதை பெற்றனர்.யானைகளை பராமரிக்கும் முதுமலையில் உள்ள பொம்மன் மற்றும் பெல்லி ஆகிய தம்பதி குறித்த இந்த படத்திற்கு விருது கிடைத்துள்ளது. *ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. சிறந்த மூலப்பாடல் என்ற பிரிவில் வழங்கப்பட்ட விருதை பாடல் ஆசிரியர் சந்திரபோஸ், இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோர் பெற்றனர். * சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது பின்னாச்சியோ-வுக்கு வழங்கப்பட்டது. *சிறந்த துணை நடிகருக்கான விருது Everything Everywhere All At Once படத்தின் கி ஹு ஹுவானுக்கு அறிவிக்கப்பட்டது. *சிறந்த துணை நடிகைக்கான விருது Everything Everywhere All At Once படத்தின் ஜேமி லீ கர்டிஸுக்கு அறிவிக்கப்பட்டது. *சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருது நவல்னி ஆவணப்படத்துக்கு வழங்கப்பட்டது; சிறந்த ஆவணப்படத்துக்கான பிரிவில் போட்டியிட்ட இந்திய படமான All That Breathes-க்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை. *சிறந்த ஒப்பனைக்கான ஆஸ்கர் விருது The whale திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது; ஆட்ரியன் மோரோட், ஜூடி சின், அன்னிமேரி பிராட்லி ஆகியோர் ஒப்பனைக்கான ஆஸ்கர் விருதை பெற்றனர்.*சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருது All Quiet on the Western Front படத்தில் பணியாற்றிய ஜேம்ஸ் ஃபிரெண்டுக்கு வழங்கப்பட்டது.*An Irish Goodbye-க்கு சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.டாம் பெர்கெலி மற்றும் ராஸ் ஒயிட் ஆகியோர் ஆஸ்கர் விருதை பெற்றுக் கொண்டனர். *சிறந்த ஆடை வடிவைப்புக்கான ஆஸ்கர் விருது Black Panther Wakanda Forever படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.*சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருது ஜெர்மனியைச் சேர்ந்த All Quiet On The Western Front படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.*சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருது All Quiet On The Western Front படத்திற்கு கிடைத்துள்ளது.*சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதை வென்றது Alll Quiet On The Western Front படம். Alll Quiet On The Western Front படத்தின் இசையமைப்பாளர் வோர்கல் பெர்டில்மான் ஆஸ்கர் விருதை பெற்றார். *ஜெர்மனியைச் சேர்ந்த All Quiet on the Western Front என்ற படம் இதுவரை 4 ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த சர்வதேச படம், இசை, ஒளிப்பதிவு, தயாரிப்பு வடிமைப்பு ஆகிய பிரிவுகளில் 4 விருதுகளை வென்றுள்ளது. *சிறந்த Visual Effects பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது ‘அவதார் தி வே ஆஃப் வாட்டர்’ படம்! ஜோ லெட்டரி, ரிச்சர்ட் பேன்ஹம், எரின் சேண்டன், டேனியல் பேரட் ஆகியோர் ஆஸ்கர் விருதினை பெற்றுக் கொண்டனர்.*சிறந்த ஒலிப்பதிவுக்கான (BEST SOUND) ஆஸ்கர் விருதை ‘Top Gun: Maverick’ திரைப்படம் வென்றது.*சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை வென்றது Women Talking*சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை வென்றது Everything Everywhere All at Once..!. Everything Everywhere All at Once திரைப்படத்திற்கு டேனியல் குவான் மற்றும் டேனியல் ஷீனர் திரைக்கதை எழுதியுள்ளனர்.*இந்த ஆண்டின் சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருது Everything everywhere all at once படத்திற்கு கிடைத்துள்ளது. *சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை Everything everywhere all at once படத்தில் நடித்த மிஷேல் யோவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்ற முதல் ஆசியப்பெண் என்ற சாதனையையும் படைத்தார்.*சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ‘The whale’ திரைப்படத்திற்காக ப்ரின்டன் ஃபரேஸர் பெற்றார்.  *சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை வென்றது Everything Everywhere All at Once படம்.Daniel Kwan, Daniel Scheinert விருதை பெற்றுக்கொண்டனர்.*சிறந்த படத்தொகுப்புக்க ன ஆஸ்கர் விருதை வென்றது’Everything Everywhere All At Once’ திரைப்படம். *சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை , சிறந்த எடிட்டிங் ஆகிய 7 ஆஸ்கர் விருதுகளை வென்றது Everything Everywhere All at Once திரைப்படம். …

You may also like

Leave a Comment

5 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi