சிம் கார்டு, ஓட்டுநர் உரிமம் கூட வாங்க முடியவில்லை :மரபணு மாற்ற நோயால் கை ரேகையின்றி 3 தலைமுறையாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பம்!

தாக்கா : வங்கதேசத்தில் ரஜ்ஷாஹி என்ற மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் சர்கெர் குடும்பத்து ஆண்கள் அடெர்மடோக்லிஃபியா என்ற அரிய மரபணு மாற்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சர்கெர் குடும்பத்து ஆண்களுக்கு கைரேகை இல்லை. சர்கெர் குடும்பத்தில் 3வது தலைமுறையாக இருப்பவர் 22 வயதான அபு. இவர் மருத்துவ உதவி பணியாளராக வேலை பார்த்து வருகிறார். அவரின் தந்தையும், தாத்தாவும் விவசாயிகள்.அபுவின் தாத்தாவிற்கும் அப்பாவிற்கும் கை விரல் ரேகை இல்லை என்பது பெரிய விஷயமாக தெரியவில்லை.ஆனால் அபுவிற்கு வருடங்கள் செல்ல செல்ல விரல் ரேகைகள் மிகவும் முக்கியமான ஒரு தரவாக மாறின. நாம் பயன்படுத்தும் அலைபேசியிலிருந்து, விமான நிலையத்தின் உள்ளே செல்வது வரை இந்த கைரேகை தரவு தேவைப்படுகிறது. 2008ம் ஆண்டு அபு சிறுவனாக இருக்கும்போது, வங்கதேசத்தில் தேசிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு கட்டைவிரல் ரேகை வேண்டும். அப்போது அபுவின் தந்தை அமல் சர்கெருக்கு எவ்வாறு அட்டை வழங்குவது என அந்த ஊழியர்களுக்கு தெரியவில்லை. எனவே அவருக்கு ‘கைரேகையற்ற அடையாள அட்டை’ வழங்கப்பட்டது.2010ம் ஆண்டு கைரேகை தகவல் பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமத்துக்கு கட்டாயமாக்கப்பட்டது. பல முயற்சிகளுக்கு பிறகு அமல் மருத்துவ சான்றிதழைக் காட்டி பாஸ்போர்ட் பெற்றார். இருப்பினும் அச்சம் காரணமாக அதை இன்னும் அவர் பயன்படுத்தவில்லை.  அவரது விவசாய வேலைக்கு மோட்டர் சைக்கிள் ஓட்டுவதும் அவசியமாக உள்ளது. இருப்பினும் அவரால் ஓட்டுநர் உரிமம் பெற இயலவில்லை. 2016ம் ஆண்டு மொபைல் சிம் வாங்க தேசிய தரவுகளுடன் கைரேகைகள் தகவல் ஒத்துப் போக வேண்டும் என அரசாங்கம் கூறியது. கைரேகை என்பதால் அபுவிற்கு சிம் கிடைக்கவில்லை. எனவே அந்த குடும்பத்தின் ஆண்கள் எல்லாரும் அவர்களின் தாயின் பெயரிலேயே சிம் கார்ட் வாங்கியுள்ளனர்….

Related posts

கண்ணாடி தொழிற்சாலையில் கம்ப்ரஷர் வெடித்து 6 தொழிலாளர்கள் பலி

ஆந்திராவில் ரசாயன தொழிசாலையில் தீ விபத்து

ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.67.11 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல்