சின்ன வெங்காயம் விலை சரிவு

தர்மபுரி, ஆக.2: தர்மபுரி உழவர் சந்தையில் சின்ன வெங்காயம் விலை சரிந்துள்ளது. ஒரு கிலோ ₹64க்கு விற்பனை செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பென்னாகரம், தொப்பூர், இண்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடைக்கு பின், சின்ன வெங்காயம் தர்மபுரி உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது பருவமழை பெய்து வருவதால் வெங்காயம் அறுவடை குறைந்தது. கடந்த இரண்டு மாதங்களாக சின்ன வெங்காயம் தர்மபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ ₹150க்கு விற்பனையானது. தற்போது வரத்து அதிகரித்ததை அடுத்து நேற்று உழவர் சந்தையில் ஒரு கிலோ ₹64க்கு விற்பனையானது.இது குறித்து உழவர் சந்தை அதிகாரிகள் கூறும்போது, தர்மபுரி உழவர் சந்தைக்கு தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் 3 டன் வரை சின்ன வெங்காயத்தை விற்பனைக்கு கொண்டு வருவர். தற்போது சின்ன வெங்காயம் வரத்து 5 டன்னாக அதிகரித்தது. இதை அடுத்து சின்ன வெங்காயம் ₹62 முதல் ₹64 வரை விற்பனை செய்யப்பட்டது என்றனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை