சின்ன வெங்காயம் விலை குறைந்தது

 

கோவை, ஜூலை 17: தமிழகத்தில் தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இதனால் காய்கறிகளின் விலையேற்றத்தை சமாளிக்க முடியாமல் இல்லத்தரசிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களினால் தியாகி குமரன் காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் விலை ரூ.180 வரை இருந்தது. அதன் விலையில் தற்போது 50 ரூபாய் குறைந்து, ஒருகிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தக்காளி விலை மட்டும் குறைாமல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

காய்கறி மார்க்கெட்டுகளில் நேற்று முன்தினம் வரை ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.110, ஆப்பிள் தக்காளி ரூ.140 என்ற அளவில் இருந்தது. ஆனால், நேற்று நாட்டு தக்காளியின் விலை ரூ.10 அதிகரித்து தற்போது ரூ.120க்கு விற்கப்பட்டு வருகிறது. ஆப்பிள் தக்காளியின் விலையில் மாற்றம் இல்லை. கோவை காய்கறி மார்க்கெட்டுகளில் சின்ன வெங்காயத்தின் விலை ஓரளவு குறைந்த போதிலும், தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது. மேலும், கோவை சுற்றுவட்டார பகுதிகளில் சின்ன வெங்காயம் சீசன் துவங்கியுள்ளதால், வரும் வாரங்களில் சின்ன வெங்காயத்தின் விலை இன்னும் குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை