சின்னாளபட்டியில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு 95வது சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று அமாவாசை அன்று தேவஸ்தான கமிட்டியார்கள் கடைவீதி அக்கசாலை விநாயகர் கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சின்னாளபட்டி பிரிவில் உள்ள ஸ்ரீராமஅழகர் கோயில் வந்தடைந்தனர். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், ஆராதானை நடந்தது. பின் கோயில் முன்பு உள்ள கொடிமரத்தில் சித்திரை திருவிழா கொடியேற்றப்பட்டது. அதன்பின்னர் மீண்டும் ஊர்வலமாக சென்று கோட்டை மந்தை மைதானத்திலும், கடைவீதி பகுதியிலும் சித்திரை திருவிழா கொடியேற்றப்பட்டது. வரும் 16ம் தேதி சித்திரா பௌர்ணமி அன்று அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி தொடங்கி 21ம் தேதி காமயசுவாமி கோயில் கமிட்டியாரால் நடத்தப்படும் பூ பல்லக்கில் ஸ்ரீராமஅழகர் கள்ளழகராக அவதாரம் எடுத்து கோயில் திரும்பும்வரை திருவிழா நடைபெறுகிறது. …

Related posts

செப்.20ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வு

பொங்கல் பண்டிகை- செப். 12 முதல் டிக்கெட் முன்பதிவு

2025 டிசம்பருக்குள் அதிமுகவில் நிச்சயம் ஒற்றுமை வரும்: வைத்திலிங்கம் பேட்டி