சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகம் அருகே ஆழ்கடலில் தீப்பிடித்த விசைப்படகு!: ஒரு கோடி மதிப்பிலான படகு சேதம்..அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மீனவர்கள்..!!

குமரி: சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகம் அருகே ஆழ்கடலில் மீனவர் படகு ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் அருகே மீன்பிடித் துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் சுமார் 350 விசைப்படகுகள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் தினசரி இரவு மீன்பிடிக்க சென்று அதிகாலையில் கரைதிரும்புவது வழக்கம். அந்த வகையில் நேற்று இரவு கிட்டத்தட்ட 350 விசைப்படகுகளிலும் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். மீன்பிடித்துவிட்டு இன்று அதிகாலை கரை திரும்பும் போது ஆழ்கடலில் 10 நாட்டிகள் தொலைவில் படகு ஒன்றில் இயந்திர கோளாறு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான விசைப்படகு முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்திருக்கிறது. படகில் இருந்த 14 மீனவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்துக்கான காரணம் குறித்து கடலோர காவல்படையினர் மற்றும் கன்னியாகுமரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள அனைத்து மீனவர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். …

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை