சின்னமனூர் நகராட்சியில் கட்டுமான பணிகள் நகர்மன்ற தலைவர் ஆய்வு

 

சின்னமனூர், மே 9: சின்னமனூர் நகராட்சியில் உள்ள 2வது வார்டில் இருக்கும் கண்ணம்மாள் கார்டன் பகுதியில் பொதுமக்களுக்கு தடை இன்றி குடி தண்ணீர் வழங்கிட மேல்நிலைத்தொட்டி தீவிரமாக கட்டப்பட்டு வருகிறது. அடுத்துள்ள 24 வார்டு கருங்கட்டான் குளத்தில் 25 லட்சம் மதிப்பீட்டில் கர்ப்பிணி பெண்களை கவனித்து கொள்ள மகப்பேறு மருத்துவமனை கட்டிட பணிகள் நடந்து வருகிறது. அதே போல் வண்டிபேட்டை பகுதியில் உள்ள நகராட்சி மற்றும் அரசு பள்ளிகளி ல் பயிலும் மாணவ, மாணவியர்களுக் கான உணவு கூடம் ரூ.33.50 லட்சம் மதிப்பீட்டில் உணவு தயாரிக்கும் கூட த்திற்கான கட்டுமான பணிகள் தீவிரமா க நடந்து வருகிறது.

சின்னமனூர் நகர் மக்களுக்காக கட்டப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை சின்னமனூர் நகர்மன்ற தலைவர் அய்ய ம்மாள் ராமு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பணிகளில் பயன்படுத்தப்படும் செங்கல், கம்பி, சிமெண்ட் என பொருட்கள் தரமாக இருக்கிறதா என கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வு பணியின் போது நகராட்சி அதிகாரி அலுவலர்கள் என உடன் சென்றனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்