சின்னமனூர் அழகர்சாமி நகரில் சாலை அமைக்க இடையூறான கிணறு-மூடுவதற்கு பொதுமக்கள் கோரிக்கை

சின்னமனூர் : சின்னமனூர் அழகர்சாமி நகரில் சாலை அமைப்பதற்கு, இடையூறாக இருக்கும் கிணற்றை மூட வேண்டும், நகருக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சின்னமனூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. மக்கள் தொகை பெருக்கத்தால் 6வது வார்டு பகுதியில் கடந்த 2007ல் அழகர்சாமி நகர் உருவானது. இதற்கு நகராட்சி அனுமதி அளித்துள்ளது. இப்பகுதியில் உள்ள 8 தெருக்களில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அழகர்சாமி நகர் 6வது தெருவில் அழகர்சாமி கோயில் அருகே 100 ஆண்டு பழமையான கிணறு உள்ளது. இது பயன்பாடற்ற நிலையில் குடியிருப்புகளின் மத்தியில் உள்ளது. இப்பகுதி விளைநிலமாக இருந்தபோது, இந்த கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். கிணற்றில் தடுப்புச்சுவர் அமைத்திருந்தாலும், சிறுவர்கள் உள்ளே விழும் அபாயம் உள்ளது. மேலும், தெருவின் மத்தியில் கிணறு இருப்பதால், கழிவுநீர் வாறுகால், குடிநீர் குழாய் இணைப்பு, சாலை அமைக்க பெரும் இடையூறாக இருப்பதாக கூறப்படுகிறது. சாலை வசதி இல்லாததால் மழை காலங்களில் தெருக்கள் சேறும், சகதியுமாக மாறுகின்றன. எனவே, அழகர்சாமி நகரில் பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பயனற்றை கிணற்றை மூடவும், நகருக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவும், நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்