சின்னமனூர் அருகே தோட்டத்தில் புகுந்து மோட்டார், குழாய்களை அடித்து நொறுக்கிய மர்மநபர்கள்: போலீசார் விசாரணை

 

போடி, ஜூலை 6: சின்னமனூர் அருகே தோட்டத்தில் புகுந்து மோட்டார், குழாய்களை அடித்து நொறுக்கிய மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அய்யம்பட்டியை சேர்ந்தவர் ஆண்டி (70). இவரது மகன்கள் பாண்டி மற்றும் சதீஷ்ராஜா. இவர்கள் மூவரும், போடி அருகே நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர்.

ஆண்டியின் தோட்டத்தில் புகுந்த மர்மநபர்கள், தண்ணீர் பைப் லைன்களை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் மின் இணைப்புகளை துண்டித்து, மோட்டார் அடித்து நொறுக்கி கயிற்றில் கட்டி கிணற்றில் தொங்க விட்டிருந்தனர். கடந்த 1ம் தேதி தோட்டத்திற்கு சென்ற ஆண்டி, குழாய்களை உடைக்கப்பட்டு மோட்டார் அடித்து நொறுக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து போடி தாலுாகா காவல்நிலையத்தில் ஆண்டி புகார் செய்தார். புகாரில், மர்மநபர்கள் பைப்லைன், மோட்டாரை அடித்து நொறுக்கியதால் வாழைகளுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால், ரூ.10 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்: 5 பேர் மீது வழக்கு

சவுக்கை செடிகளை பிடுங்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு

கணவன் மாயம்: மனைவி புகார்