சின்னத்தடாகத்தில் டிரான்ஸ்பார்மர் பாகங்கள் திருட்டு

 

பெ.நா.பாளையம், ஜூலை 25: துடியலூர். சின்னத்தடாகத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர்களின் பாகங்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை துடியலூர் அடுத்த சின்னத்தடாகம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட செங்கல்சூளைகள் இயங்கி வந்தன. புறம்போக்கு நிலத்தில் அதிக அளவில் மண் வெட்டி எடுத்ததாக வந்த புகாரை அடுத்து சூளைகள் இயக்க அனுமதி ரத்து செய்யப்பட்டது.

அவைகளுக்கு வழங்கிய மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் மின்சாரம் இல்லாத டிரான்ஸ்பார்மர்களில் உள்ள மின்வயர்கள் மற்றும் பாகங்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். அதன்படி தண்ணீர் பந்தல், அனுவாவி சுப்பிரமணியர் கோயில் பிரிவில் உள்ள டிரான்ஸ்பார்மரின் பாகங்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது, இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் தடாகம் போலீசில் புகார் செய்தனர். அதன்படி அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை