சினிமா பட பாணியில் பிளாஸ்டிக் கவரால் தலை, முகத்தை மூடிக்கொண்டு உணவு டெலிவரி ஊழியர் தற்கொலை: கொடுங்கையூரில் பரபரப்பு

பெரம்பூர்: கொடுங்கையூரில் சினிமா பட பாணில், பிளாஸ்டிக் கவரை தலை, முகத்தில் கட்டிக்கொண்டு, உணவு டெலிவரி ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடுங்கையூர் திருவள்ளுவர் சாலையை சேர்ந்தவர் ராம்குமார் (36). இவருக்கு மாலதி என்ற மனைவியும், தர்ஷன் (5), ரோகித் (3) என்ற 2 மகன்களும் உள்ளனர். ராம்குமார் தனியார் உணவு டெலிவரி கம்பெனியில் டெலிவரி பாயாக வேலை செய்து வந்தார். தற்போது, அரையாண்டு பரீட்சை முடிந்து பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளதால், ராம்குமாரின் மனைவி மாலதி, 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு மாதவரத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வேலை முடிந்து வந்த ராம்குமார், சாப்பிட்டுவிட்டு அருகில் இருந்த அவரது அண்ணன் மற்றும் தாயாரின் வீட்டிற்கு சென்று பேசிவிட்டு, தனது வீட்டிற்கு தூங்க வந்துள்ளார். நேற்று காலை வெகு நேரம் ஆகியும், ராம்குமார் வீட்டை விட்டு வெளியே வராததால், உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, ராம்குமார் தலை, முகம் என கழுத்து வரை பிளாஸ்டிக் கவரை இறுக்கமாக கட்டிய நிலையில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள், கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, ராம்குமாரின் கால்கள் கட்டப்பட்டு இறந்து கிடந்ததார். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் தமிழ்வாணன் உள்ளிட்டோர் ராம்குமாரின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி, அவரின் செல்போன் உள்ளிட்ட பொருட்களை ஆய்வு செய்து விசாரித்தனர். அதில், ராம்குமார் பிளாஸ்டிக் கவரை தலை மற்றும் முகத்தில் முழுவதுமாக மூடியவாறு சிறிய நைலான் கயிரை கழுத்தில் இறுக்கி கட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கால்கள் இரண்டையும் போர்வையால் கட்டியுள்ளார். எதற்காக ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து இதுவரை தெளிவாக தெரியவில்லை. வேலையில் ஏதாவது பிரச்னையா அல்லது குடும்பத்தில் ஏதாவது பிரச்னையா என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  ‘ஆசை’ சினிமா படத்தில் வருவது போன்று, உணவு டெலிவரி ஊழியர் ஒருவர் பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடி, கயிற்றால் கழுத்தை இறுக்கி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

Related posts

விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் வாகன நிறுத்தம் விரைவில் திறக்கப்படும்: நிர்வாகம் தகவல்

குடிநீர் வாரியம் சார்பில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்: நாளை நடக்கிறது

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள், தன்னார்வலர்களிடம் மாபெரும் சர்வே நடத்த திட்டம்: மாநகராட்சி புது முயற்சி