சினிமா தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் தேடப்பட்டவர் பலி

கோவை : கோவை காந்திபுரம் 100அடி ரோடு பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் கடந்த மாதம் 24ம் தேதி அஜித்குமார் நடித்த ‘வலிமை’ திரைப்படம் வெளியானது. அன்று அதிகாலை 4 மணிக்கு ரசிகர் மன்றத்தினருக்கான சிறப்பு காட்சி நடந்தது. அப்போது தியேட்டர் எதிரேயுள்ள ரோட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பெட்ரோல் நிரப்பிய பாட்டிலுடன் வந்த 2 பேர் தீ பற்றவைத்து அதை வாகனங்கள் நிறுத்தும் ரோட்டோர பார்க்கிங் முன் வீசிவிட்டு பைக்கில் ஏறி தப்பி சென்றனர். இதுகுறித்து காட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக, ரத்தினபுரியை சேர்ந்த லட்சுமணன் (22) என்பவரை சில நாட்களுக்கு முன் காட்டூர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் லட்சுமணனின் கூட்டாளிகளான பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த தவசி என்கிற அந்தோணி (27), சுரேஷ் (26), முருகன் (26) ஆகியோரை தேடி வந்தனர். 2 நாளுக்கு முன் இவர்கள் திருநெல்வேலி பகுதியில் முனீர்பள்ளம் என்ற இடத்தில் பைக்கில் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்தோணி இறந்துவிட்டார். மற்ற 2 பேரும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் குணமானதும் கைது செய்ய கோவை போலீசார் திட்டமிட்டுள்ளனர்….

Related posts

செய்யாறில் இன்று திருமணம் நடக்க இருந்தது காஞ்சிபுரம் சென்ற மணப்பெண் கடத்தலா?

பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

16 ஆண்டு தலைமறைவு சாமியார் அதிரடி கைது