சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள்

 

மதுரை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இவ்வழிபாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் வந்து வழிபடுவர். இதற்கிடையே, சித்திரை மாத பவுணர்மி மிகுந்த விசேஷ நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் லட்சக்கணக்கில் திருவண்ணாமலைக்கு வருவது வழக்கம்.

இதன்படி இந்த ஆண்டு சித்ரா பவுணர்மி மே 4ம் தேதி நள்ளிரவு துவங்கி 5ம் தேதி வரை இருப்பதால், 2 நாட்கள் திருவண்ணாமலை கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, பள்ளி மாணவர்களுக்கு வரும் 29ம் தேதியில் இருந்து கோடை விடுமுறை விடப்படுகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் குடும்பம், குடும்பமாக திருவண்ணாமலைக்கு வருவர்.

இதனை கருத்தில்கொண்டு, திருவண்ணாமலைக்கு மே 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. இவ்வகையில், மதுரை மாட்டுத்தாவணியில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் சென்னை, கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை திருவண்ணாமலைக்கு இயக்க ேபாக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது