சித்தையன்கோட்டை பேரூராட்சியில் கொசு மருந்தடிக்கும் பணி தீவிரம்

பட்டிவீரன்பட்டி, அக். 13: சித்தையன்கோட்டை பேரூராட்சி பகுதிகளில் கொசு மருந்தடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணியை பேரூராட்சி தலைவர் போதும்பொண்ணு முரளி துவக்கி வைத்தார். துணைத்தலைவர் ஜாகீர்உசேன், செயல்அலுவலர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர். இதனைத்தொடர்ந்து சித்தையன்கோட்டை கடைவீதி, பள்ளிகள் உள்ள பகுதிகள் மற்றும் அனைத்து வார்டு பகுதிகளிலும் கொசு மருந்தடிக்கப்பட்டது.

மேலும் அனைத்து வார்டுகளிலும் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் சுத்தம் செய்யப்பட்டது. மேலும் பொதுஇடங்களில் கிடந்த தேவையற்ற குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அள்ளப்பட்டது.பொதுமக்கள் தங்களது தெருக்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வீடுகளை சுற்றிலும் மற்றும் தெருக்களில் மழைநீர் தேங்காத வகையில் பாதுகாப்பதுடன், தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும் என பேரூராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை