சித்திரை முழுமதி நாளான இன்று மெரினா வளாகத்தில் அமைந்துள்ள தொல்காப்பியருக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மலர்த்தூவி மரியாதை

சென்னை: தமிழின் மூத்த இலக்கண நூலான தொல்காப்பியத்தை படைத்தவர் தொல்காப்பியர். தொல்காப்பியம் 1610 (483+463+664) நூற்பாக்களால் ஆனது இதன் உள்ளடக்கம். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது எழுத்ததிகாரம் தனிமொழியிலும், புணர்மொழியிலும் உள்ள எழுத்துகளைப் பற்றிக் கூறுகிறது.இரண்டாவது சொல்லதிகாரம் மொழித்தொடர் அமையும் பாங்கைச் சொல்கிறது.மூன்றாவது பொருளதிகாரம் எழுதப்படும் நூலிலுள்ள வாழ்க்கைப் பொருளையும் அப்பொருள் சொல்லப்பட்டுள்ள யாப்பு, அணி முதலான பாங்குகளையும் தமிழ் மரபையும் விளக்குகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தொல்காப்பியத்தை இயற்றியவரும் ‘ஐந்தாயிரம்  நிறைந்த தொல்காப்பியன்’ என்று புகழப்படும் தொல்காப்பியருக்கு ஆண்டுதோறும் சித்திரை முழுமதி நாளில்  சென்னைப் பல்கலைக் கழக மெரினா வளாகத்தில் அமைந்துள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும் சிலைக்கு அருகில் புகைப்படம் வைத்து மலர்த்தூவியும்  தமிழ் வளர்ச்சித் துறையால் சிறப்பு செய்யப்பட்டு வருகிறது. அவ்வகையில் இவ்வாண்டு சித்திரை முழுமதி நாளான 16.04.2022 அன்று காலை 10.00 மணிக்கு சென்னைப் பல்கலைக் கழக மெரினா வளாகத்தில் அமைந்துள்ள தொல்காப்பியரின்  திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்த்தூவிச் சிறப்புச் செய்யும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள், சீர் பெருமக்கள், தமிழறிஞர்கள் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு