சித்தானந்தா கோயிலில் 108 சங்காபிஷேகம்

புதுச்சேரி, டிச. 12: சென்னை மக்கள் வெள்ளத்தின் துயரத்தில் இருந்து மீண்டுவர புதுச்சேரியில் 186 ஆண்டு பழமை வாய்ந்த சித்தானந்தா கோவிலில் 108 சங்காபிஷேகம் செய்து பக்தர்கள் மனமுருகி வேண்டினர். ஹேவிளம்பி வருஷம் 1837ம் ஆண்டு வைகாசி மாதம் 15ம் தேதி வெள்ளிக்கிழமை மத் குரு சித்தானந்த சுவாமிகள் ஜீவன் முக்தி அடைந்தார். அந்த நன்னாளில் இருந்து சுமார் 186 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் மத் குரு சித்தானந்தா சுவாமிகளுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். 4வது சோமவாரம் திங்கட்கிழமையை முன்னிட்டு, மீண்டும் சென்னையில் இயல்பு நிலை திரும்பவும், இந்த நிலைமை மீண்டும் ஏற்படாமல் இருக்கவும் மற்றும் உலக நன்மை வேண்டி மத் குரு சித்தானந்தா கோவிலில் நேற்று 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. சங்கு பிரதிஷ்டை, கணபதி, ருத்ர ஹோமம், மஹா அபிஷேகம் ஆகியவை செய்யப்பட்டு சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 சங்குகளுக்கு நவதானியங்கள் மற்றும் ஒன்பது வகையான பூக்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்