சித்தர் கோயில் ஜெயந்தி விழா

மானாமதுரை, செப். 27: மானாமதுரை ஒன்றியம் இடைக்காட்டூரில் உள்ள இடைக்காடர் சித்தர் கோயிலில் ஜெயந்தி விழா நடைபெற்றது. மூலவர் இடைக்காடர் சித்தருக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடத்தி வெள்ளிக்கவசம் சாற்றி மலர் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த திரளான பக்தர்கள் விழாவில் பங்கேற்று இடைக்காடர் சித்தரை தரிசித்தனர். சிவ பக்தர்கள் கைலாய வாத்தியங்களை இசைத்து சிவபெருமான் புகழ் பாடும் பாடல்களைப் பாடி பஜனை நடத்தினர்.

Related posts

வத்திராயிருப்பில் மருத்துவமனையை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

தீயில் மரங்கள் எரிந்து நாசம்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அக்.20ல் 20 ஏழை ஜோடிகளுக்கு திருமணம்: வீரபாண்டி கோயிலில் நடக்கிறது