சித்தமல்லி மேல்பாதி ஊராட்சியில் அடிப்படை பணிகளுக்கு ₹40 லட்சம் நிதி ஒதுக்கீடு

நீடாமங்கலம், ஜன. 21: நீடாமங்கலம் ஒன்றியம் சித்தமல்லி மேல்பாதி ஊராட்சி மற்றும் காளாச்சேரி ஊராட்சிகளுக்கு பிரதம மந்திரி முன்னோடி கிராம திட்டம் 2022-23 ஆதிதிராவிடர் வாழும் பகுதியில் அடிப்படை பணிகள் மேற்கொள்ளுதல் திட்டத்தில் ₹40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சித்தமல்லி மேல்பாதி ஊராட்சி ஒரத்தூர் கீழத்தெரு மேற்கு கரை சாலை 516 மீட்டர் ₹ 17.76 லட்சம், சித்தமல்லி கீழத்தெரு சாலை 90 மீட்டர் ₹ 2.24 லட்சம், காளாச்சேரி வடக்கு ஆதிதிராவிடர் தெரு 144 மீட்டர் ₹ 3.56 லட்சம், சோத்தரை 51 மீட்டர் ₹2.22 லட்சம், மேலப்பூவனூர் மேலக்கட்டளை சாலை 335 மீட்டர் ₹11.15 லட்சம், மேலப்பூவனூர் கீழ்பாதி சாலை 51 மீட்டர் ₹ 3.7 லட்சம் செலவில் மேம்பாடு செய்து தார் சாலையாக்கும் பணி சித்தமல்லி ஒரத்தூரில் ஊராட்சி ஒன்றிய தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன் துவங்கி வைத்தார். இதில் சித்தமல்லி ஊராட்சி தலைவர் குணசீலன், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் சுமதி குணசேகரன், கண்ணன், திலகா அன்பு, மற்றும் சுதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து