சித்தனேந்தல் கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

காரியாபட்டி, டிச.27: காரியாபட்டி ஒன்றியம் மறைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சார்பாக நாட்டு நலத்திட்ட பணி முகாம் சித்தனேந்தல் கிராமத்தில் நடைபெற்றது.முகாம் துவக்க விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தன்ராஜன் தலைமை வகித்தார். முகாமினை அதிமுக மாவட்ட அவைத் தலைவர் சித்தனேந்தல் ஜெயபெருமாள் தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியர் முத்துராஜா முன்னிலை வகித்தார். முகாமில் மாணவர்கள் சாலை சீரமைப்பு, கோவில் வளாகம் சுத்தம் செய்தல், பிளாஸ்டிக்கழிவுகள், முட்புதர்கள் அகற்றுதல் போன்ற பணிகளை செய்தனர்.

முகாமில் கல்வியின் அவசியம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் சாலை பாதுகாப்பு, போதை ஒழிப்பு, சமூக சேவையில் இளைஞர்களின் பங்கு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கங்கள் நடைபெற்றது.முகாமில் சுற்றுபுறச்சூழல் விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிரீன் பவுண்டேசன் நிறுவனர் பொன்ராம் தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் மாசிலாமணி முன்னிலை வகித்தார். ஆசிரியர் ஆறுமுகம், சமூக ஆர்வலர் தினேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் மாசிலாமணி செய்திருந்தார்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்