சிங்கம்புணரி அருகே 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஏபிடிஓ கைது

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றிய உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) நிர்மல்குமார்.  எஸ்.புதூர், உலகம்பட்டி ஊராட்சிகளில் உள்ள பள்ளிகளில் ரூ.1 கோடி மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டப்பட உள்ளது. இப்பணிகளை படமஞ்சியை சேர்ந்த வெள்ளைச்சாமி டெண்டர் எடுத்துள்ளார். இவரிடம் ஏபிடிஓ நிர்மல்குமார், பணிகளை தொடங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து வெள்ளைச்சாமி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார், வெள்ளைச்சாமியிடம் கொடுத்து அனுப்பினர். நேற்று மதியம் லஞ்ச பணத்தை ஏபிடிஓவிடம் வெள்ளைச்சாமி கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், நிர்மல்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்….

Related posts

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை