சிங்கம்புணரி அருகே மாட்டுவண்டி பந்தயம்: சின்னமனூர் முதலிடம்

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே காளாபூரில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு நான்காம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கிராம அம்பலக்காரர் பார்த்திபன் தலைமை வகித்தார். அதிமுக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ், மாவட்ட ஊரட்சி குழு தலைவர் பொன் பாஸ்கரன் போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் மதுரை, திண்டுகல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து  இருந்து சின்ன மாடுகள் பிரிவில் 40 மாட்டு வண்டிகள் மற்றும் பெரிய மாடுகள் பிரிவில் 14 மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. மருதிபட்டி வரையிலான 8 கிலோ மீட்டர் தூரம் பந்தை இலக்காக நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இதில் சின்ன மாடு பந்தயம் இரண்டு பிரிவாக நடைபெற்றதில் முதல் பிரிவில் தேனி மாவட்டம் சின்னமனூர் லிங்கேஸ் பாண்டியன் முதல் பரிசும், புளிமலைபட்டி முனிசாமி இரண்டாம் பரிசும், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் சரத்குமார் மூன்றாம் பரிசும், கருப்பூர் வீரையா சேர்வை நான்காம் பரிசும் பெற்றனர். சின்ன மாடு இரண்டாவது பிரிவில் முதல் பரிசு காட்டுக்குளம் வசந்த் அம்மாள் நகுல் நிலா முதல் பரிசும், சின்னமனூர் சரவணா தேவி தங்கம் ரெடிமேட் இரண்டாம் பரிசும், இளையான்குடி சிவா மூன்றாம் பரிசும், காளாப்பூர் தமிழ்மணி நான்காம் பரிசு வென்றனர். நடு மாடு பிரிவில் ஆணையூர் பறவை செல்வம் முதல் பரிசும், காளாப்பூர் பாயும்புலி சுடர் தேவன் இரண்டாம் பரிசும், பல்லவராயன் பட்டி அழகு தேவர் இளமாறன் மூன்றாம் பரிசும், வேந்தன்பட்டி பவதாரணி சுப்பு தேவர் நான்காம் பரிசை வென்றனர். போட்டியை காண சாலையின் இருபுறமும் ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்….

Related posts

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால்வாயில் தேங்கிய 148 மெட்ரிக் டன் கழிவு அகற்றம்

சாத்தூர் அருகே இன்று காலை பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமம் ரத்து: ஒருவர் கைது

பெண் டாக்டர் தற்கொலை