சிங்கம்புணரி அருகே பிடாரி அம்மன் கோயில் பால்குட விழா

சிங்கம்புணரி, ஏப்.11: சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் குன்று வளர்ந்த பிடாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று தொடங்கியது. பிரான்மலை மற்றும் சேர்வைக்காரன்பட்டி, ஒடுவன்பட்டி, சுற்று கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால்குடங்களை சுமந்து முக்கிய விதிகள் வழியாக வலம் வந்து கோயிலை அடைந்தனர்.அங்கு பிடாரி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகளை காண்பிக்கப்பட்டது. வண்ணமலர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு கட்சி அளித்தார். மாலையில் பெண்கள் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து இரவு அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் இரவு சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

Related posts

நாய் கடித்ததில் 2 பேர் காயம்

குறுஞ்சேரி ஊராட்சியில் கிராமங்களுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி

வீட்டை விட்டு வெளியேறிய மாணவிகள் ஈரோட்டில் மீட்பு