சிங்கம்புணரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

சிங்கம்புணரி,அக்.9:சிங்கம்புணரி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் 1,5,9,10வது வார்டுகளுக்கு உட்பட்ட வார்டு கவுன்சிலர்கள் ஏற்பாட்டில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் கஞ்சா, புகையிலை, கூலிப் உள்ளிட்ட போதை வஸ்துகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளும் அவற்றை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பேசினர். நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர் கவிதா, முன்னாள் பேரூராட்சி தலைவர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். இதில் சார்பு ஆய்வாளர்கள் லெனின் குணசேகரன், ஆசிரியர் மணியன், கவுன்சிலர்கள் வள்ளி மனோகரன், தனசேகரி அலாவுதீன், மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

கல்லூரிகளுக்கு இடையே கபடி போட்டி

கணவரின் உடலை மறு போஸ்ட்மார்டம் கோரிய மனு தள்ளுபடி

திருச்சி அருகே சோகம் வெளிநாடு செல்ல இருந்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு