சிங்கப்பூர் லீ குவான் யூக்கு மன்னார்குடியில் நினைவு சின்னம்: ஆசிரியர் கூட்டணியினர் நன்றி தெரிவிப்பு

மன்னார்குடி, மே 26: தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கோட்டூர் வட்டாரக் கிளையின் பொதுக் குழு கூட்டம் தங்கபாபு தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட துணைச் செயலாளர் ராஜமாணிக்கம், முன்னாள் மாவட்ட பொரு ளாளர் ஜோன்ஸ் ஐன்ஸ்டீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், டெல்டா பகுதியைச் சேர்ந்த பல தமிழர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி பொருளாதார ரீதியில் அவர்களின் நிலையை உயர்வடையச் செய்த சிங்கப்பூரின் தேசத்தந்தை, என போற்றப்படும் லீ குவான் யூக்கு மன்னார்குடி யில் நினைவுச் சின்னமும், நூலகமும் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற் றப்பட்டன. முன்னதாக, வட்டாரச் செயலாளர் பாரதி வரவேற்றார். வட்டாரப் பொருளாளர் தாமரைச் செல்வன் நன்றி கூறினார்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்