சிக்கன் கப்சா

செய்முறை:கப்சா மசாலா தூள் செய்யகப்சா மசாலா தூள் அரைக்க மிக்ஸியில் தனியா, மிளகு, சோம்பு, கருப்பு ஏலக்காய், சுக்கு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு தூளாக அரைத்துக்கொள்ளவும்.சிக்கன் கப்சா செய்யபாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து 7 நிமிடம் வதக்கவும். அடுத்து மிளகு, சீரகம், கிராம்பு சேர்த்து வதக்கி பின்பு சிக்கனில் சிறு சிறு கீறல்கள் போட்டு, சிக்கனை சேர்த்து வதக்கவும். சிக்கன் நிறம் மாறியதும் அதில் கப்சா மசாலா தூள் சேர்க்கவும். அடுத்து நறுக்கிய கேரட், தக்காளி சேர்த்து வதக்கி பின்பு உப்பு சேர்த்து கலந்துவிடவும். பிறகு தக்காளி விழுது, ஜாதிக்காய் சேர்க்கவும். அடுத்து சுடு தண்ணீர் மற்றும் சிக்கன் ஸ்டாக் சேர்க்கவும். பாத்திரத்தை மூடி மிதமான தீயில் 20 நிமிடம் வேகவிடவும். 10 நிமிடம் கழித்து சிக்கனை திருப்பி விட்டு, கப்சா மசாலா தூள் சேர்த்து கலந்து பாத்திரத்தை மூடி 10 நிமிடம் வேகவிடவும். அடுத்து அரிசியை கழுவி சேர்த்து, பின்பு காய்ந்த திராட்சை சேர்த்து பாத்திரத்தை மூடி அரிசியை வேகவிடவும். சிக்கன் கப்சா தயார்….

Related posts

தினை அரிசி வெஜிடபிள் உப்புமா

வேர்க்கடலைப்பருப்பு துவையல்

தர்பூசணி தோல் துவையல்