சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்: சாத்தூரில் பரபரப்பு

 

சாத்தூர், ஜூன் 5:விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே மேட்டமலையை சேர்ந்தவர் செல்வக்குமார் (27). இவர் மேட்டமலையில் உள்ள தனியார் தீப்பெட்டி ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த மே 23ம் தேதி வீட்டில் இருந்து செல்வக்குமாரை தீப்பெட்டி கம்பெனிக்கு வேலைக்காக தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளரின் சகோதரர் தினேஷ் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அன்று இரவு வீட்டிற்கு வராமல் இருக்கவே மனைவி வேலுத்தாய் கணவரை தேடிவந்த போது அப்பகுதியில் உள்ள பயணிகள் பேருந்து நிறுத்தத்தில் இருந்துள்ளார்.

அங்கிருந்தவரை வீட்டிற்கு அழைத்து சென்று கேட்ட போது தன்னை தீப்பெட்டி அலுவலகத்தில் இருந்த பார்த்தசாரதி, தினேஷ் மற்றும் ஒருவர் கம்பியால் தாக்கியதாக தெரிவித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்தவரை சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தனது கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மனைவி வேலுத்தாய் சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இறந்த செல்வகுமாரின் உடலை சாத்தூர் அரசு மருத்துவ மனையில் உடற்கூராய்வு செய்தனர். பின்னர் உறவினர்கள் அடித்து கொலை செய்த மூன்று பேரை கைது செய்ததால் தான் உடலை பெற்றுக்கொள்வோம் என சாத்தூர் அரசு மருத்துவ மனையின் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்