சாலை விரிவாக்க பணிகளுக்கு கண்மாய் மண் திருடுவதாக புகார்

திருப்பரங்குன்றம், செப். 14: திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கரைப்பகுதியில் ரூ.41.89 கோடி மதிப்பீட்டில் 1.20 கி.மீ தூரத்திற்கு கரையில் சாலை மற்றும் 9.5 மீட்டர் உயரத்திற்கு தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய இப்பணிகள் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தென்கால் கண்மாயிலிருந்து எடுக்கப்பட்ட மண், லாரிகள் மூலம் வெளியே கொண்டு செல்லப்படுவதாக பொதுமக்கள் மற்றும் விவ்சாயிகள் நீர் வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் தாசில்தார் மற்றும் போலீசாருக்கு நீர்வளத்துறையினர் அளித்த தகவலின் பேரில், மண் அள்ளி சென்ற லாரிகளை கைப்பற்றி காவல் நிலையம் கொண்டு செல்ல தாசில்தார் கவிதா உத்தரவிட்டார். இதையடுத்து நீர்வளத்துறையினர் அளித்த புகாரின் பேரில் திருநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு