சாலை விபத்தில் வெல்டிங் பட்டறை உரிமையாளர் பலி

திருவிடைமருதூர், ஆக. 20: திருவிடைமருதூர் வட்டம் கதிராமங்கலம் அருகே நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் வெல்டிங் பட்டறை உரிமையாளர் உயிரிழந்தார். திருவிடைமருதூர் வட்டம், பந்தநல்லூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்திரன் மகன் சிவகுருநாதன் (31). இவர் அதே பகுதியில் வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவரது பட்டறையில் மயிலாடுதுறை மாவட்டம் பனையக்குடி பகுதியை சேர்ந்த தங்கமணி மகன் முத்துகிருஷ்ணன் (45) வெல்டராக வேலை செய்கிறார். நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் பட்டறையில் வேலையை முடிந்ததும் இருவரும் பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டனர்.

சிவகுருநாதன் பைக்கை ஓட்ட, முத்துகிருஷ்ணன் பின்னால் அமர்ந்து சென்றார். காகிதப்பட்டறை கடைத்தெரு பகுதியில் சென்றபோது கீழக்காட்டூர், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பாஸ்கர் மகன் சந்துரு (21), மளிகை சாமான்கள் வாங்கிக் கொண்டு பைக்கில் புறப்பட தயாரானார். அவரது பைக் மீது சிவகுருநாதன் பைக் வேகமாக மோதியது. இதில் படுகாயமடைந்த 3 பேரையும் அப்பகுதியினர், 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிவகுருநாதன் உயிரிழந்தார். சந்துருவும், முத்துகிருஷ்ணனும் தீவிர சிகிச்சை பெறுகின்றனர். இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Related posts

நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதியளித்த முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: மண்பாண்ட தொழிலாளர்கள், விவசாயிகள் பாராட்டு

மலைக்கோட்டை கோயிலுக்கு சொந்தமான ரூ.3.25 கோடி நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு

தொடர் டூவீலர் திருட்டு இருவர் மீது ‘குண்டாஸ்’ மாநகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை