சாலை விதிகளை பின்பற்றியவர்களுக்கு பரிசு

 

கோவை, பிப். 18: கோவை மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது. சாலை போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டது. கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கோவை மாநகர போக்குவரத்து கூடுதல் துணை கமிஷனர் சிற்றரசு தலைமை வகித்தார்.

காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே சாலை விதிகளை பின்பற்றி இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் மற்றும் கார்களில் சீட் பெல்ட் அணிந்து சென்றவர்களை பாராட்டி பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. கூடுதல் துணை கமிஷனர் சிற்றரசு கூறுகையில், ‘’சாலை பாதுகாப்பு விழிப்புணர்வின் அவசியத்தை கருத்தில் கொண்டு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக செல்லவேண்டும். விபத்தை தவிர்க்க அனைவரின் ஒத்துழைப்பு அவசியம்’’ என்றார்.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி