சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

 

திருப்பூர், ஜன. 20: ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரி 15ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 14ம் தேதி வரை கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சாலை பாதுகாப்பு மாத விழா திருப்பூர் மாவட்டத்தில் தொடங்கி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தெற்கு மற்றும் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. இதனை போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், சப்-கலெக்டர் சவுமியா ஆனந்த், வட்டார போக்குவரத்து அதிகாரி (தெற்கு) ஆனந்த் மற்றும் ஆய்வாளர்கள் நிர்மலா தேவி, பாஸ்கரன், செந்தில்ராம், ஈஸ்வரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி பழைய பஸ் நிலையம் வரை சென்றடைந்தது. இதில் அதிகாரிகள், தன்னார்வலர்கள், வாகன விற்பனையாளர்கள் பலர் கலந்துகொண்டனர். செல்லும் வழியில் அனைவருக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மாணவ-மாணவிகளுக்கு போலீஸ் கமிஷனர் துண்டு பிரசுரம் வழங்கினார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை