சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

மோகனூர், ஜூலை 10: மோகனூரை அடுத்த அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், போக்குவரத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியை புனிதா தலைமை வகித்தார். நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி கலந்து கொண்டு சாலை விதிகளை பின்பற்றி செல்வது குறித்து பேசினர். தொடர்ந்து 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனங்கள் ஓட்டக்கூடாது. புதிய மோட்டார் வாகன சட்டப்படி, குழந்தைகளுக்கு வாகனங்கள் கொடுக்கும் பெற்றோர்களுக்கு ₹25 ஆயிரம் அபராதம், 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்