சாலை பணிகளை கலெக்டர் ஆய்வு

நல்லம்பள்ளி, ஜூன் 14: நல்லம்பள்ளி அருகே சிவாடி ஊராட்சியில் அமைந்துள்ள கந்துகால்பட்டி, பூதனஅள்ளி பகுதியில் சாலை அமைத்து பல ஆண்டுகள் ஆவதால், சீரமைக்கப்பட்டது. தற்போது, இந்த சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். எனவே, சிவாடி ரயில் நிலையத்தில் இருந்து பூதனஅள்ளி சாலை வரை, புதியதாக சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2022-2023 திட்டத்தின் கீழ், புதிதாக தார்சாலை அமைக்க ₹86.28 லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கியது. இந்த பணிகள் முடிந்த நிலையில், கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, உதவி பொறியாளர் சுகுணா, சிவாடி ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் உடனிருந்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை