சாலை ஆய்வாளர், சாலை பணியாளர், எழுத்தர், ஓட்டுநர்கள் ஓய்வுபெற அனுமதி அளிக்கும் நடைமுறையை மாற்றியது அரசு

சென்னை: நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சந்திரசேகர் அனைத்து கண்காணிப்பு பொறியாளர்கள், ேகாட்ட பொறியாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பணியாளர்களின் வயது முதிர்வில் ஓய்வு மற்றும் சுய விருப்ப ஓய்வு நேர்வுகளில் தடையின்மைச் சான்றுகளை துறைத்தலைவர் என்ற முறையில் இதுநாள் வரை நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் சென்னை அலுவலகத்தில் பெறப்பட்டு உரிய வழிமுறையாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போது, முதன்மை இயக்குனர் கடிதத்தில், முதன்மை இயக்குனர் நியமன அதிகாரியாக இல்லாத பணிநிலைகளில், இந்த சாலை பணியாளர்கள், திறன்மிகு உதவியாளர்கள், ஓட்டுநர்கள், காவலர்கள் மற்றும் பதிவுரு எழுத்தர்களுக்கு தனியர்கள் குறித்த ஏதேனும் குற்ற வழக்குகள், புகார்கள், ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட உட்கோட்டம், கோட்டம், வட்ட பொறியாளர்கள் அலுவலகத்திலிருந்து பெறப்பட்டாலேயன்றி யாதொரு தகவலும் இந்த அலுவலகத்தில் இருக்காது. இந்த தனியர்கள் குறித்த எந்த ஒரு பிரேரணை மீதான நடவடிக்கை மற்றும் தடையின்மைச் சான்று வழங்குவது முற்றிலும் முரணான நடவடிக்கையாக இருக்கும். முதன்மை இயக்குனர் ஆகியோர் நியமன அதிகாரிகளாக இல்லாத பணிநிலைகள் அனைத்திற்கும் தங்கள் அளவிலேயே முறையாக ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, முதன்மை இயக்குனர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது போலவே, தலைமை பொறியாளர் அலுவலகத்திலும் இந்த பணியாளர்கள் குறித்த ஏதேனும் குற்ற வழக்குகள், புகார்கள், ஒழுங்கு நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் சம்பந்தப்பட்ட உட்கோட்ட  மற்றும் கோட்ட மற்றும்  வட்ட அலுவலகங்களிலிருந்து பெறப்பட்டாலேயன்றி யாதொரு தகவலும் இந்த அலுவலகத்தில் இருக்காது. இந்நிலையில் தனியர்கள் குறித்த எந்த ஒரு பிரேரணை மீதான நடவடிக்கை மற்றும் தடையின்மைச் சான்றுகள் குறித்த கருத்துருக்களை இனிவரும் காலங்களின் உரிய நேர்வுகளில் முறையாக ஆய்வு செய்து பணிநியமன அலுவலர் என்ற நிலையில் தங்கள் அளவிலேயே தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து கண்காணிப்புப் பொறியாளர்கள் மற்றும் கோட்டப் பொறியாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்