சாலையோரம் பழுதாகி நின்ற கன்டெய்னர் மீது லாரி மோதி டிரைவர் பலி

மதுராந்தகம்: மதுராந்தகம் புறவழிச்சாலையில் பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலியானார். திண்டிவனத்தில் இருந்து தேங்காய் லோடுகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை 6 மணிக்கு சென்னையை நோக்கி லாரி புறப்பட்டது. மதுராந்தகம் புறவழிச்சாலையில் சென்றபோது, திடீரென லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடி, அங்கு சாலையோரத்தில் பழுதாகி நின்றிருந்த கன்டெய்னர் லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. அந்த லாரியின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியதில் டிரைவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தகவலறிந்து மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்தனர். அதில் கோவை மாவட்டம், சூளூரை சேர்ந்த மணிமாறன் (60). கடந்த 2 ஆண்டுகளாக லாரியில், தேங்காய் லோடுகளை ஏற்றி டிரைவராக வேலை செய்து வந்தார் என தெரிந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர். இதற்கிடையில் போலீசார், விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்பபடுத்தி, போக்குவரத்து நெரிசலை சீரமைத்து வாகனங்களை அனுப்பி வைத்தனர்….

Related posts

பழனி நகரில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 980 கன அடியாக உயர்வு