சாலையோரம் நிறுத்தப்பட்ட 45 கனரக வாகனங்களுக்கு அபராதம்

நாகர்கோவில் செப்.4: நாகர்கோவில் முதல் திருவனந்தபுரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக டாரஸ் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் நிற்பதால் விபத்துக்கள் ஏற்படுவதுடன் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து எஸ்.பி. உத்தரவின் பேரில் தக்கலை டி.எஸ்.பி. பார்த்தீபன் மேற்பார்வையில் தக்கலை முதல் களியக்காவிளை வரை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் சாலை ஓரத்தில் நிறுத்தபட்டிருந்த 45 க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் அனைத்திற்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி