சாலையை சீரமைக்க கோரி வாழை மரம் நட்டு காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

பந்தலூர், ஆக.13: பந்தலூர் அருகே தேவாலாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேவாலாவில் இருந்து கரியசோலை செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் சாலையில் ஏற்பட்டுள்ள குழிகளில் மழைநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், பந்தலூர் அருகே தேவாலா பஜாரில் நேற்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக சாலை சீரமைக்காததை கண்டித்து சாலையில் வாழை மரங்கள் நடவு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேவாலா 17ம் வார்டு கிளை செயலாளர் சௌகத் தலைமை வகித்தார். நகர தலைவர் ஷாஜி, பொதுக்குழு உறுப்பினர் கோபிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லியாளம் நகர மன்ற கவுன்சிலர் சூரிய கலா பிரபு, மாவட்டச் செயலாளர் அனீஸ், நிர்வாகிகள் சோனி, ஜெயக்குமார், சந்திரன், ஜோய், குஞ்சுமணி, அஷ்ரப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு