சாலையில் வீசி எரியப்படும் குப்பைகள்

 

ஊட்டி, அக். 17: ஊட்டி டம்ளர் முடக்கு பகுதியில் இருந்து தாவரவியல் பூங்கா வரும் சாலையில் வீசி எறியப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட புதுமந்து, டம்ளர் முக்கு பகுதியில் இருந்து தாவரவியல் பூங்காவிற்கு வர சாலை உள்ளது. இச்சாலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதுதவிர ஆயுதப்படை வளாகம், தமிழகம் அரசு ஊழியர்கள் குடியிருப்பு, ஆய்வகம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

இச்சாலையில் நகராட்சி சார்பில் இப்பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், வனத்தை ஒட்டி இச்சாலையில் பொதுமக்கள் பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து வகையான குப்பைகளையும் வீசி எறிகின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, இப்பகுதியில் தூய்மை பணிகள் மேற்கொள்வதுடன், குப்பைகளை வீசி எறிவோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்