சாலையில் முறிந்து விழுந்த மரங்கள்

 

கெங்கவல்லி, ஆக.19: கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில் நேற்று மாலை 6 மணி அளவில், சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த சூறைக்காற்றில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி எதிரே 5 புளியமரங்கள் வேரோடு முறிந்து சாலையில் விழுந்தன. இதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலின் பேரில் கெங்கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணன், மின்வாரிய அலுவலர் பெரியசாமி, நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் விரைந்து வந்து, சாலையில் முறிந்து விழுந்த மரங்களை பணியாளர்களை கொண்டு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பின் மரங்கள் வெட்டி அகற்றப்பட்ட பின், போக்குவரத்து சீரானது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்