சாலையில் முட்களை வெட்டி போட்டு மறியல்: கமுதி அருகே பரபரப்பு

 

கமுதி, மே 28: கமுதி அருகேயுள்ள கே.நெடுங்குளம் வழியாக திருச்சிலுவைபுரம், உடைகுளம், நல்லாங்குளம், புதுப்பட்டி உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல வேண்டும். கே.நெடுங்குளம் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் 8 கிமீ சாலையை கடக்க சுமார் 40 இடங்களுக்கும் மேல் ஆவதால் இப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் வாகனம் வேகமாக செல்ல முடியாததால் உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று சாலையை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க கோரி இப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டோர் கமுதி- கீழ்குடி சாலையில் கருவேல மர முட்களை வெட்டி ேபாட்டு மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்ததும் கமுதி யூனியன் ஆணையாளர் கோட்டைராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. நடத்தை விதிகள் முடிந்தவுடன் சாலை உடனடியாக போட்டு தரப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பிறகே பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு