சாலையில் பிறந்த நாள் கொண்டாடியதை தட்டிக்கேட்ட முன்னாள் ஊராட்சி தலைவர் மகனை கொல்ல முயற்சி: 6 பேருக்கு வலை

புழல்: செங்குன்றம் அருகே தீர்த்தகரையம்பட்டு, பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் மோகன். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவரது மகன் சாந்தபிரியன் (36). அதே பகுதியில் சிமென்ட், ஜல்லி, செங்கல் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு, பைக்கில் வீட்டுக்கு வந்தார். அப்போது, 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று, இவரது வீட்டுவாசல் முன்பு, கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை ஆடையினுள் மறைத்து வைத்தவாறு நின்றிருந்தது. இதை பார்த்த மோகன், மர்ம கும்பலிடம், இங்கே ஏன் நிற்கிறீர்கள் என தட்டிக்கேட்டார். இதனால், ஆத்திரமடைந்த மர்ம கும்பல் சாந்தபிரியன் மீது கற்களை வீசி தாக்கியதோடு, அவரை கத்தியால் சரமாரியாக குத்தியது. இதில், அவரது வலது கால் உள்பட பல்வேறு இடங்களில் பலத்த  காயங்கள் ஏற்பட்டன. படுகாயம் அடைந்த சாந்தபிரியனை ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை பார்த்த மர்ம கும்பல் பைக்கில் ஏறி, அங்கிருந்து தப்பி சென்றது. படுகாயம் அடைந்த சாந்தபிரியனை அக்கம்பக்கத்தினர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.புகாரின் பேரில், செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கடந்த சில நாட்களுக்கு முன், செங்குன்றம் அடுத்த கோட்டூர் பகுதியை சேர்ந்த அஜித் என்பவரின் பிறந்த நாளை, அவரது நண்பர்கள் ஆகாஷ், குட்டி, தீனா, சின்னராசு, உமாபதி மற்றும் அவர்களது கூட்டாளி ஆகியோர் சாலையை மறித்தபடி, கொண்டாடி உள்ளனர். இதை சாந்தபிரியன் தட்டிக்கேட்டதும், அதனால், இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும், அந்த முன்விரோதம் காரணமாக, சாந்தபிரியனை 6 பேர் கொண்ட கும்பல் கொலை செய்ய முயற்சித்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்த செங்குன்றம் போலீசார், தலைமறைவாக உள்ள மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்….

Related posts

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது