சாலையில் திரியும் மாடுகளை பிடித்த சுகாதார ஆய்வாளர் மீது தாக்குதல்: 2 பேருக்கு வலை

அண்ணாநகர்: அண்ணாநகர் மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் திரிந்த மாடுகளை நேற்று முன்தினம் சுகாதார ஆய்வாளர் பாலகுரு தலைமையில் ஊழியர்கள் பிடித்து வாகனங்களில் ஏற்றி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மாடு உரிமையாளர்களான 10 பேர், மாடுகளை விடுவிக்கும்படி சுகாதார ஆய்வாளரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். அதற்கு அவர் மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த மாடுகளின் உரிமையாளர்கள் நாராயணன், பிரகாஷ் ஆகியோர் சுகாதார ஆய்வாளரை சரமாரியாக தாக்கினர். இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை ஊழியர்கள் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில், வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாராயணன், பிரகாஷ் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை