சாலையில் செல்லும்போது கழிவுநீரை சிதறவிடும் லாரிகள்: வாகன ஓட்டிகள் அவதி

ஆவடி:  திருமுல்லைவாயல் குடியிருப்பில் உள்ள வீடுகளில் செப்டிக் டேங்க் கழிவுநீரை, கழிவுநீர் வாகனம் மூலம் அகற்றி அதனை அண்ணனூர் பகுதியிலுள்ள பம்பிங் ஸ்டேஷனுக்கு எடுத்து செல்வது வழக்கம். இந்நிலையில், கழிவுநீர் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் சரிவர பராமரிப்பதில்லை. இதனால் சாலையில் கழிவுநீர் கொட்டிக் கொண்டே செல்கிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் சாலையில் நடந்து செல்லும் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் வாகனங்களில் செல்வோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இந்த வாகனம் சாலையில் கடந்து செல்லும்போது, பின்னால் வருபவர்கள் மற்றும் வாகனங்கள் மீது கழிவுநீரை சிந்திவிட்டு செல்கிறது.  இந்த கழிவுநீரால் மக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, இந்த வழியாக கழிவுநீர் லாரிகள் செல்லும் இதுபோன்ற வாகனங்கள் முறையான அனுமதி பெற்று உரிய ஆவணங்களுடன் தான் ஓடுகின்றனவா என்பதை ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுசெய்ய வேண்டும். மேலும் இதுபோன்ற தகுதியற்ற வாகனங்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்….

Related posts

ஆம்பூரில் மேம்பால பணியின்போது சாரம் சரிந்து விபத்து

மதுரை மண்டலத்திற்கு தேவையான அறிவியல் பரிசோதனை நிபுணர்களை உடனே நியமிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம்