சாலையில் சரிந்த மூங்கில் புதர்கள் அகற்றம்: பாதுகாப்பை அதிகரிக்க கோரிக்கை

 

கூடலூர்,ஜூன்29: கூடலூர் பந்தலூர் சுற்றுவட்ட பகுதிகளில் பெய்து வரும் தென் மேற்கு பருவ மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகளில் சிறிய மரங்கள் மற்றும் மூங்கில் புதர்கள் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. பருவ மழையால் ஏற்படும் பாதிப்புகளை சீரமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.பேரூராட்சி, நகராட்சி,ஊராட்சி பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு, நெடுஞ்சாலை மற்றும் காவல்துறையினர் கண்காணித்து அவ்வப்போது உடனடியாக அகற்றி சீரமைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு போஸ்பாரா முதல் பீச்சனகொல்லி மற்றும் மச்சிக்கொல்லி செல்லும் சாலையில் ஆங்காங்கே மூங்கில் புதர்கள் சரிந்து வாகனங்கள் செல்வதற்கும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் இடையூறு ஏற்பட்டது.அப்பகுதிகளில் துணைத் தலைவர் யூனஸ்பாபு மேற்பார்வையில் பேரூராட்சி பணியாளர்கள் மூங்கில் புதர்களை வெட்டி அகற்றி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை