சாலையில் சகதியால் பக்தர்கள் பாதிப்பு

 

கமுதி, ஜூன் 6: கமுதி களத்தடி முனீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பாதை சகதியால் பாதிப்படைந்து காணப்படுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கமுதி அருகே சுந்தரபுரம் பகுதியில் களத்தடி முனீஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இப்பகுதியில் உள்ள ஊரணி கரையை கடந்து தான் இக்கோவிலுக்கு செல்ல முடியும்.

பாதை முழுவதும் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுவதால், விஷ பூச்சிகளுக்கு பயந்து பலர் மாலை நேரங்களில், நடைபெறும் பூஜைக்கு செல்வதற்கு அச்சமடைந்து வருகின்றனர். இப்பகுதியில் நீர்த்தேக்க நிறைந்து தெருக்கள் முழுவதும் குடிநீர் வீணாகி, ஓடி வருகிறது. இதனால் கோவிலுக்கு செல்லும் பாதையில் தேங்கி, பாதை முழுவதும் சகதியாக மாறி விடுகிறது. இதனை பேரூராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்