சாலையின் நடுவே குவிந்து கிடக்கும் மணல் நிலக்கோட்டை நகர் பகுதியில் விபத்துகள் அதிகரிப்பு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

நிலக்கோட்டை, ஆக. 6: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் திண்டுக்கல்-அணைப்பட்டி,சோழவந்தான் மற்றும் மதுரை-வத்தலக்குண்டு,பெரியகுளம் என நான்கு சாலைகள் சந்திக்கும் முக்கிய நகராக உள்ளது. தினசரி காய்கறி சந்தை,வாரச்சந்தை,தினசரி பூ மார்க்கெட்,நீதிமன்றம்,வட்டாட்சியர் அலுவலகம் உட்பட அரசு அலுவலகங்கள் அனைத்தும் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. மேலும் நிலக்கோட்டை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் தினசரி பல்வேறு வேலைகளுக்காக நிலக்கோட்டை நகர்பகுதிக்கு வந்து செல்கின்றனர். இதனால் நிலக்கோட்டை நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் போக்குவரத்து வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட சென்டர்மீடியனை ஒட்டியபகுதி மற்றும் சாலை ஓரப்பகுதிகளில் மணல் குவியல்கள் கிடக்கிறது. இதனால் தினமும் பூ வியாபாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் வருபவர்கள் வாரி கீழே விழுந்து சிராய்ப்புகள், எலும்பு முறிவுகள் உள்ளிட்ட அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. அதனை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலை துறையினர் சாலை நடுவே மற்றும் பகுதியில் குவிந்து கிடக்கும் மணல் குவியல்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு