சார் அந்த 16 நம்பரை சொல்லு சார் பாணியில் முதல்வர் மகளிடம் ஆன்லைன் மோசடி.. மக்களே உஷார்

டெல்லி: OLX மூலம் பழைய சோபாவை விற்க முயன்ற டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகளின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா பழைய சோபா ஒன்றை விற்பனை செய்வதற்காக பிரபல விற்பனை தலமான ஓஎல்ஸ்க்ஸில் விளம்பரம் கொடுத்துள்ளார். இதனை பார்த்த மோசடி கும்பல் ஒன்று ஹர்ஷிதாவை அணுகி சோபாவை வாங்குவதாக கூறியுள்ளது. ஹர்ஷிதாவின் வங்கி கணக்கின் விவரத்தை பெற்று அவரின் நம்பிக்கையை பெறுவதற்காக சிறிய அளவு பணத்தை செலுத்தியுள்ளனர். பின்னர் QR code ஒன்றை அனுப்பி அதன் மூலம் ஹர்ஷிதாவின் வங்கி கணக்கில் இருந்து 34,000 ரூபாய் பணத்தை அந்த கும்பல் சுருட்டியுள்ளது. ஏமாற்றப்பட்டது குறித்து டெல்லியில் காவல் நிலையத்தில் ஹர்ஷிதா  புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மோசடி நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். …

Related posts

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்

கேரள டிஜிபியின் மனைவியின் நிலம் ஜப்தி செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்: சுமூக தீர்வு ஏற்பட்டதால் வழக்கு வாபஸ்