சார்பதிவாளர் அலுவலகம் இடமாற்றம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் கட்டிடத்தில், திருவொற்றியூர் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. தற்போது கட்டிடம் பழுதடைந்ததாலும், இடவசதி போதுமானதாக இல்லாததாலும் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இதையடுத்து பொதுமக்கள் நலன்கருதி காலடிப்பேட்டையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்து, சொந்த கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கே.பி.சங்கர் எம்எல்ஏ சட்டமன்றத்தில் முதல்வரிடம் கோரிக்கை வைத்தார். அதன்படி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதுவரை சார்பதிவாளர் அலுவலகம் திருவொற்றியூர் விம்கோ நகரில் உள்ள தனியார் கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்க தீர்மானிக்கப்பட்டது. …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்